என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கன்னியாகுமரி லாட்ஜ்
நீங்கள் தேடியது "கன்னியாகுமரி லாட்ஜ்"
கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் அறையில் விபசார தொழிலில் ஈடுபட்ட அழகி, புரோக்கர் மற்றும் லாட்ஜ் மேனேஜரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.
சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகளும் கன்னியாகுமரியில் ஊடுருவி சுற்றுலா பயணிகளிடம் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். இதனால் அவர்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கன்னியாகுமரியல் போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரியின் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மாறு வேடங்களிலும் போலீசார் கண்காணிப்பு நடக்கிறது.
அதேப்போல விபசார செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் தற்போது கன்னியாகுமரிக்கு பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருவதால் விபசார கும்பல் நடமாட்டமும் அதிகமாக இருப்பதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜ் முன்பு விபசார புரோக்கர் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை அழகியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி இடையூறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த லாட்ஜ் முன்பு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சத்யன் (வயது 52) என்ற விபசார புரோக்கர் நின்றுகொண்டு விபசாரத்திற்காக சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த லாட்ஜ் அறையில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு ஒரு அறையில் அரை குறை ஆடையுடன் அழகி ஒருவர் இருந்ததும் தெரிய வந்தது.
போலீசாரை கண்டதும் அந்த அழகி அதிர்ச்சி அடைந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரது கைப்பையை சோதனை செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் அந்த லாட்ஜின் மானேஜரும் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி லாட்ஜில் விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடியில் பெண் பலியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த காதலன் இன்று உயிரிழந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்வதால் இங்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் வருகை தருகிறார்கள்.
இவர்கள், இங்குள்ள லாட்ஜுக்கள், தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி கன்னியாகுமரி மற்றும் அருகில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள். காதல் ஜோடிகள், கள்ளக்காதலர்களும் இங்குள்ள சில விடுதிகளில் தங்கி ஜாலியாக பொழுதை கழிப்பதால் இங்கு தங்குபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
லாட்ஜுகளில் அறை எடுப்பவர்கள் தங்களது முகவரி சான்று நகலை அளிக்க வேண்டும். மேலும் சந்தேகப்படும் வகையில் இங்கு தங்குபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். போலீசாரும் அடிக்கடி சோதனை நடத்துவார்கள்.
ஆனாலும் கன்னியாகுமரியில் சில லாட்ஜுகளில் காதல் ஜோடி, கள்ளக்காதலர்கள் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கருமாந்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 27). கோபி செட்டிப்பாளையம் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்த கார்த்திகா (26) ஆகிய கள்ளக்காதல் ஜோடி கன்னியாகுமரி லாட்ஜில் அறை எடுத்து தங்கி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கார்த்திகாவுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சதீசுக்கு திருமணம் ஆகவில்லை. சதீஷ் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கார்த்திகா ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
கள்ளக்காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது உறவினர்களுக்கு தெரிய வந்ததால் சதீசும், கார்த்திகாவும் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். கன்னியாகுமரி வந்து லாட்ஜில் தங்கியிருந்து பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
எப்படியும் தங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் விஷத்தை குடித்தனர். அதன் பிறகு தங்களது கைகளையும் பிளேடால் வெட்டிக் கொண்டனர்.
இதில் கார்த்திகா, லாட்ஜ் அறையிலேயே இறந்து விட்டார். உயிருக்கு போராட்டிக் கொண்டிருந்த சதீஷை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததனர்.
அங்கு சதீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.30 மணிக்கு சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இறந்த கார்த்திகாவின் உடலும் அதே ஆஸ்பத்திரியில் உள்ளது. அவர்கள் இருவரின் உடல் பிரேத பரிசோதனைகளும் இன்று நடக்கிறது. இதையொட்டி சதீஷ் மற்றம் கார்த்திகாவின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

×

X